பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& புதுவை (மை)க் கவிஞர் வேதாந்தப் பாடல்கள் : இத்தொகுதியில் 25 பாடல்கள் உள்ளன. பாடல்கள் இலகு தமிழில் இருப்பினும் இவை யாவும் அநுபூதி நிலையில் உள்ளவை. நான் என்ற தலைப்பிலுள்ள ஏழு பாடல்களும் கீதையின் விபூதியோகத்தையும் (இயல் - 10) நம்மாழ்வாரின் திருவாய்மொழியையும் (5.6) நினைக்கச் செய்கின்றன. வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான் மண்ணில் திரியும் விலங்கெலாம் நான் கானில் வளரும் மரமெலாம் நான் காற்றும் புனலும் கடலுமே நான் (1) என்பது பாரதியார் பாடல். அர்ச்சுனா, எல்லா உயிர்கட்கும் வித்து எதுவோ, அது நான். என்னையன்றி ஜங்கம ஸ்தாவரங்களில் வாழ்வது ஒன்றுமில்லை. (10: 39) என்பது கீதை. கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்: கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்: கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்: கடல்ஞாலம் கிண்டேனும் யானே என்னும் -திருவாய் 5.6: 1 என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. பலவகைப் பாடல்கள் : இத்தொகுப்பில் பதினாரு பாடல்கள் உள்ளன. இவற்றுள் புதிய ஆத்திசூடி, பாப்பா பாட்டு, முரசு, புதிய