பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார்:ஒரு கண்ணோட்டம் 15 2. நாடு மொழி பற்றாளர்: பாரதியார் வாழ்ந்த காலம் நம் நாடு அடிமை நாடாக இருந்தகாலம். இக் காலத்தில் பாரதியாரின் பாடல்கள் முகிழ்த்தன. எனவே நாட்டுப்பற்று. விடுதலை வேட்கை, தாய்மொழிப்பற்று, சமுதாய முன்னேற்றம், பெண் விடுதலை, பழமையில் புதுமை போன்றவற்றின்அடிப்படையில் அவர் பாடல்கள் அமைந்தன. இவையாவும் பாரதீயங்களாகின. இவற்றுள் நாட்டுப்பற்று மொழிப்பற்று ஆகிய தலைப்புகளில் உள்ள பாடல்களை மட்டிலும் ஆய்ந்து அவருடைய நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் எடுத்துக் காட்டுவேன். நாட்டுப் பற்று: தாம் பிறந்த நாடு தமிழகமாயினும், பாரதியார் கண்ட நாடு பாரத நாடு. அவர்தம் தேசிய பார்வை மிக விரிந்தது. தமிழகத்தையும் பிற பகுதிகளையும் பாரதப் பெருநாட்டின் அகப்பகுதிகளாகவே நோக்கினார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மரபு வழிவந்த தமிழ் மகனிடம் குறுகிய நோக்கு எங்ங்ணம் முகிழ்க்கும்? பாரத நாடு முழுவதும் அடிமைப்பட்டிருந்த நிலையில் தமிழக விடுதலையை மட்டிலும் பிரித்துப்பாடும் குறிப்பு அவர்தம் பாடல்களில் இருக்க முடியுமா? எனவே, விரிந்த மனநிலையைக் கொண்ட அவர் பாரதத்தை பாரத மாதாவாக - இந்தியத் தாயாகவே-காண்கின்றார். நாடே பெரும்பாலான பாடல்கட்குக் கவிதைப் பொருளாயின. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே-அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே-அவர் 1. புறம் - 192