பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதுவை (மை)க் கவிஞர் அவர் சிந்தனையில் எழுகின்றது. விடுதலைப் பயிரும் அவர் மனத்தில் முகிழ்க்கின்றது. ஆங்கில ஆட்சியால் அடிமைதான் நம்மவர்க்குப் புதிதேயன்றி விடுதலை புதிதன்று என்று அவர் தூய மனம் எண்ணுகின்றது. இந்தியத் தாயை-பாரத மாதாவை-நோக்கிப் பேசு கின்றார். நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால் என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ? இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஒராயோ?* ஒராயிரம் வருடம் ஒய்ந்து கிடந்து விட்ட தம் நாட் டினரிடம் இடைக்காலத்து வந்த இழிநிலையை எடுத்துக் காட்டிக் கழிவிரக்கம் கொள்ளுகின்றார். அன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம் ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே பன்னநீ வேதங்கள் உபநிட தங்கள் பரவுபுகழ்ப் புராணங்கள் இதிகா சங்கள் இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம் என்என்று புகழ்துரைப்போம் அதனை இந்நாள்:” 14. தே. கீ. சுதந்திரப் பயிர்-13, 14 15. டிெ. பாரத மாதா நவரத்தின மாலை - 3