பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புதுமை (வை)க் கவிஞர் கொண்டெழுதல் வேண்டும்; மொழியை வளப்படுத்த வேண்டும். இலக்கியச் செல்வத்தை, கவைச் செல்வத்தைப் பெருக்குதல் வேண்டும். சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்று தமிழன் உயர்வைச் சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் படியச் செய்ததிலிருந்து இவர்தம் மொழிப் பற்றை அறிய முடிகின்றது. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை? உண்மை, வெறும்புகழ்ச்சி இல்லை’ என்று மொழியின் பெருமையை, இலக்கிய வளத்தின் சிறப்பை முரசு கொட்டி முழக்குவர். ஆதிசிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத் தான் " என்று தமிழ்த்தாயின் வாயில் வைத்தே தமிழின் தெய்வப் பிறப்பை எடுத்துரைப்பார்; இலக்கணத்தின் பழமையையும் பகர்வார். இவ்விடத்தில், 27. ப. பா. பாப்பாப் பாட்டு - 12 28. தே. கீ. தமிழ் - 2 29. டிெ. தமிழ்த்தாய் - 1