பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 27 என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான்.80 என்ற அகத்திய முனிவரைப் பற்றிய கம்பன் வாக்கை நினைக்கின்றோம். தமிழ்ப் புலவோர்கள் தீஞ்சுவைக் காவியங்களைச் செய்து தந்ததையும் நம் திருச்செவி சாற்றுவார். கன்னிப் பருவத்தில் அந்நாள் - என்றன் காதில் விழுந்த திசைமொழி எல்லாம் என்னென்ன வோ பெயர் உண்டு - பின்னர் யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!" என்று தம் காதில் விழுந்த திசைமொழிகளெல்லாம் பெயர் கூடத் தெரியாமல் அழிவுற்றன என்று கூறி தமிழின் இறவாத தன்மையை - மார்க்கண்டேயத்தை - எடுத்துக் காட்டி மகிழ்வார். இந்த உலகத்தில் அமர வாழ்வு பெற வேண்டுமாயின், 'தெள்ளுதமிழ் அமுதின் சுவை காணுங்கள்' என்று மொழிவார். இன்பத்தேன் வேண்டு மென்றால் 'செந்தமிழ் நாடென்று செய்யுங்கள்’’ என்று மேலும் நாட்டின்மேல் வைத்து நல்லுரை பகர்வார். சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்பதே இங்ங்ணம் பகர் வதற்குக் காரணம் என்று கருதலாம். தமிழ்மொழி வளர்ச்சியைப் பற்றிய பாரதீயம் இது: பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்ற வேண்டும்" 30. கம்ப. ஆரணிய - அகத்திய - 47 31. டிெ. டிெ - 6 32. டிெ. தமிழ் - 3