பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதுவை (மை)க் கவிஞர் 3. கல்விச் சிந்தனையாளர்: பொது மக்கள் கடவுளை வழிபடுவதற்குத் திருக்கோயில்கள் இன்றியமை யாதவை; வழிபாட்டிற்கு கோயில்கள் இன்றியமையாத நல்ல சூழ் நிலையையும் தூய்மையையும் போற்றிக் காப்பவை. அது போலவே பொது மக்கள் தம் குழந்தைகள், தம் சிறுவர்கள், வளர்ந்தவர்கள் இவர்கள் பயிற்சி பெறுவதற்கு எல்லா நிலைகளிலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இன்றியயைாதவை என்பதை, வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி தோறும் இரண்டொரு பள்ளி; நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி' என்ற கவிதையில் புலப்படுத்துவார். நாடு விடுதலை பெற்ற பிறகு இந்த நிலையை எம்மருங்கும் காணலாம். வழிவழியாக முன்னோர் தேடி வைத்த அறிவுச் செல்வத்தைப் பின்னர் வரும் இளைஞர்கள் பெற்றுப் பயனடைய வேண்டும், தம்மையும் உயர்த்தித் தாம் பிறந்த நாட்டையும் உயர்த்த வேண்டும் என்பது கல்வி பற்றிக் கவிஞர் கண்ட கனவு. வறுமையின் காரணமாக இளைஞன் ஒருவன் கல்வி பெறுவதற்குக் தடை ஏற்படக் கூடாது என்பதையும் சிந்தித்துள்ளார் கவிஞர். செல்வர் களும் அரசும் இதற்கு வழி செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல், - இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிரம் நாட்டல், 1. தோ. பா. வெள்ளைத் தாமரை - 6