பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 31 ஆயினும் மைய அரசாலும் மாநில அரசாலும் நம் நாட்டுக்கேற்ற கல்வி முறையை வகுக்க இயலவில்லை. பழைய ஆங்கிலக் கல்வி முறையில் சில ஒட்டு வேலைகள் செய்கின்றனரேயின்றி அதனை அடியோடு அகற்றிப் புதுக்கல்வி ஏற்பாட்டை (Curriculum) வகுக்கவில்லை. அதிகம் பேசுவானேன்? நம் நாட்டுக்கேற்ற கல்விமுறை இன்னதுதான் என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தவும் இயலவில்லை. இங்குப் பாரதியாரின் கவிதைக்கு மதிப்பு தரும் அளவுக்குக் கவிதை துவலும் கருத்திற்குத் தர முடியவில்லை. நாடு விடுதலை பெறுவதற்கு முன் இஃது ஒரு பிரசாரக் கவிதையாகப் பயன்பட்டிருக்கலாம்; இப் போது இதனைக் கூறுவது பத்தாம் பசலித்தனமாகும். இந்த நிலையில் இன்று எம்மருங்கும் ஆங்கிலமொழி மூலம் கல்வி புகட்டும் பள்ளிகள் தோன்றிய வண்ணம் உள்ளன. பெற்றோர்களும் ஊதாரித்தனமாகச் செலவு செய்து வருவதையும் காணலாம். ஒரு சாரார் ஆங்கில முறையில் கல்வி பயிற்றும் முறையையே வெறுப்பதையும், இன்னொரு சாரார் ஆங்கில மொழியையே வெறுப்பதை யும் காணமுடிகின்றது. நாமே வகுத்துக் கொண்ட அரசு இன்னும் தாய்மொழி மூலம் கல்வி புகட்ட வழிவகைளை வகுக்க முடியாமல் உள்ளது. அப்படி ஒரு முறை வகுக்கப் பெற்றுச் செயற்பட்டால் பின் விளைவுகள் என்னாமோ என்று எண்ணித் தயங்குகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. குழந்தை பிறந்தவுடன் அதன் பெற்றோர் அதன் கல்வி பற்றியும் அதன் வேலைப் வாய்ப்பைப் பற்றியும் அதிகமாகக் கவலை கொள்வது நடைமுறைப் போக்காக இருப்பதை எம்மருங்கும் காணலாம். அறிவியல் கல்வி : இன்று அறிவியல் வளர்ச்சியை அறிவு வெடிப்பு (Explosion of Knoupedge) arcáng). Gaspatib. sigosaur sh