பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 33 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்: இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.8 என்றும் யோசனை கூறுகின்றார். தமிழில் எல்லாக் கலைகளையும் எழுதவும் விளக்கவும் முடியும் என்பதை இன்றும் சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இவர்கள் தமிழ் மொழியில் எல்லாவற்றிற்கும் தக்க கலைச் சொற்கள் இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு எண்ணுகின்றனர், எந்த மொழியிலும் அதன் வாயிலாகப் பொருள்களை விளக்க முயன்றாலன்றிப் புதிய கலைகட்கு வேண்டிய சொற்களும் சொற்றொடர்களும் அமைவதில்லை, பொருள்களை - கருத்துகளை - எடுத்துக்கொண் டு விளக்க முயன்றால் இவை தாமாகவே அமைந்துவிடும். இவ்வாறே மேற்புல மொழியனைத்திலும் கலைச்சொற் கள் உண்டாகி அம்மொழிகள் வளர்ச்சியடைந்து வருகின் றன. கலைச் சொற்களை உண்டாக்கிக்கொண்டு தாய் மொழியில் தொடங்க வேண்டும் என்று நினைப்பது நீந்தக் கற்றுக் கொண்ட பிறகு நீரில் இறங்க வேண்டும் என்று எண்ணுவது போலாகும். செயலில் இறங்கினால்தான் அனைத்தும் சீர்படும். சாலை அமைப்பதற்கு முன்னர் மண்சாலை, மண்ணும் பெரிய சல்லிகளும் கலந்த சாலை, மண்ணும் சிறிய சல்விகளும் கலந்த சாலை என்றிப்படிப் பல படிகளைத் தாண்ட வேண்டியுள்ளதல்லவா? இந்நிலை யைத் தாய்மொழி பயிற்று மொழியாக அமைவதிலும் சந்திக்க நேரிடும். இலக்கிய இலக்கண வளமும், சொற் களஞ்சியப் பேறும் பெற்றுள்ள தமிழ் மொழியின் நீர் மையை அறிந்து, பிற கலைகளைத் தமிழ் மொழியில் வடித் துத்தரும் பணியில் ஈடுபடுவோர்கள்தாம் தமிழ் மொழி 8. டிெ தமிழ் - 2 7–3