பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 35 என்ற கவிதையில் கவிஞரின் அறிவியல் கல்வியில் பேரவா நிழலிடுவதைக் கண்டு மகிழலாம். அறிவியல் கல்வி தமிழில் (தாய் மொழியில்) பெற வேண்டும் என்பது இவர்தம் அதிராக் கொள்கை. அதற்கு முன்னர் அறிவியல்துறைகட்குரிய கலைச் சொற்களை அறுதியிடல் வேண்டும் என்பதற்கும் கோடி காட்டுகின் றார்; யோசனைகள் கூறுகின்றார்.' 'தமிழில் சாத்திர பரிபாஷை 'அஸ்திவார காரியம்’, 'பரிபாஷை சேகரிக்க ஒருபாயம்’ எ ன் ற த ைல ப் புக ளி ல் இவற்றைக் காணலாம். இராஜாஜி தலைமையமைச் சராக இருந்த காலத்திலும் (நாடு விடுதலையடைவதற்கு முன்பு), திரு. தி. சு. அவிநாசிலிங்கம் கல்வியமைச்சராகப் பணி புரிந்த காலத்திலும் (விடுதலைக்குப் பின்னர்) திரு. சி. சுப்பிரமணியம் கல்வியமைச்சராகப் பணிபுரிந்த காலத்திலும் (விடுதலைக்குப் பின்னர்) கலைச் சொற்கள் தொகுக்கப்பெற்றதை நாம் அறிவோம் * இவை தவிர கோவையிலிருந்து வெளிவரும் கலைக்கதிர் நிறுவனம் சுமார் ஐம்பதாண்டுப் பணியின் விளைவாக கலைச்சொற் களை மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளமை (1985) ஒர் இமாலய சாதனையாகும். தொழில் கல்வி : தொழில் வளம் பெருகினால்தான் நாட்டுவளம் பெருகும் என்பது இக்காலப் பொருளியல் காட்டும் 12. பாரதியார் கட்டுரைகள் -பக். (208-210) 13. இதன் விவரங்களையும் இதன் தொடர்பான ஆக்கச் செயல்களையும் இந்த ஆசிரியரின் 'அறிவியல் தமிழ்’ (கட்டுரை-6) என்ற நூலில் (பாரி நிலையம், சென்னை-108) விரிவாகக் காணலாம்.