பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவை (மை)க் கவிஞர் 36 உண்மை. ஜப்பான் போன்ற சிறு நாடுகளிலும் செல்வம் கொழிப்பதை இன்று நாம் காணாமல் இல்லை. பின் தங்கிய நாடுகளின் வளர்ச்சிக்கு இத்தகைய சிறு நாடு களும் உதவி வருவது நமக்கு வியப்பினை உண்டாக்கு கின்றது. பல்வேறு தொழில்கள் மூலம் பல்வேறு பண்டங்களின் உற்பத்தி பெருக வேண்டுமானால் எல்லா மட்டங்களிலும் தொழிற் கல்வி பெருகவேண்டும். சிறியனவும் பெரியனவு மான தொழிற் சாலைகள் பெருக வேண்டும். பண்டங் களை வேற்று நாடுகட்கு ஏற்றுமதி செய்து அந்நியச் Gossom.ausoffsputo (Foreign exchange) Guðjäggi, வேண்டும். இவ்வாறெல்லாம் நாட்டின் தொழில்வளம் பற்றிக் கனவுகள் காண்கின்றார் பாரதியார். பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும் பண்ணி மலைகளென வீதிகுவிப் போம். கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வோர் காசினி வணிகருக்கு அவை கொடுப் போம்.14 என்ற பாடலில் இந்தக் கனவுகளைக் கண்டு தெளியலாம். பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்தலையும் தொழிற் சாலைகளை அமைத்கலையும் தொழிற்கல்வி நிலையங் களை நிறுவுதலையும் பற்றிய திட்டங்களை, ஆயுதம்செய் வோம்.நல்ல காகிதம்செய்வோம் ஆலைகள் வைப் போம்கல்விச் சாலைகள் வைப் போம்: ஒயுதல்செய் வோம்தலை சாயுதல்செய் யோம்; உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள்செய் வோம். SAHiSHHHHHAAASAAAS 14. தே. கி. பாரததேசம் - 6