பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார்:ஒரு கண்ணோட்டம் 4l விட அதிக எண்ணிக்கையில் தேறி வருவதைக் காண்கின் றோம். சமூகத்தில்-குடும்பத்தில்-ஆணும் பெண்ணும் இரு கண்களை யொத்தவர்கள். ஒரு கண்ணைக் குத்திக் கெடுத்தல் மடமைச் செயலாவதுபோலவே, அவர்கள் அறிவை வளராது தடுத்தலும் அறிவுடைமைச் செயலன்று என்று உவமையால் விளக்குகின்றார். கண்கள் இரண்டில் ஒன்றைக் - குத்தி காட்சி கெடுத்திட லாமோ ? பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணிர்' என்று பேசுவதைக் காணலாம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்கு шотsi}25 என்று மேலும் இக்கருத்தினை அரண் செய்வர். பெண்கள் உயர்கல்வியைப் பெற்று உயர்ந்தோங்க வேண்டும் என்பது கவிஞரின் உட்கிடக்கை. உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஒது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவும் சென்று புதுமை கொணர்ந் திங்கே 24. டிெ. டிெ.10 25. டிெ. புதுமைப் பெண் - 1