பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புதுவை (மை)க் கவிஞர் திலக வாணுத லார்தங்கள் பாரத தேச மோங்க உழைத்திடல் வேண்டு * ԱՌf7 Ան: விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம். சாத்தி ரங்கள் பலபல கற்பராம்; சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்: மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பராம்; காத்து மானிடர் செய்கை யனைத் தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ?: என்றெல்லாம் மேல்நிலைக் கல்வி பெற்ற பெண்கள் குலம் தழைக்கப் பேரவாக் கொள்கின்றார். பெண்கள் பற்றி இங்ங்ணம் பல இடங்களில் பேசுவார் கவிஞர். புதுமுறைக் கல்வி : பாரதியாரின் கவிதைகளையும் பிறவற்றையும் ஊன்றிப் பயிலுங்கால் அவர் ஏதோ புதுமுறைக் கல்வியைப்பற்றிச் சிந்தித்தாக ஊகம் செய்யத் தூண்டு கின்றது. இந்தமுறைக் கல்வியினால் பண்பாடு, புதுமுறை யான சமய நம்பிக்கை, பக்தி வளர்ச்சி, மூடப் பழக்க வழக்கங்களை ஒழித்தல் போன்ற வகையில்-சீர்திருத்த 26. டிெ. புதுமைப் பெண்-8, 9