பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புதுவை (மை)க் கவிஞர் 4. வைணவச் செல்வர்: பாரதியின் பாடல் களில் காணப் பெறும் பூமகள், இராமன், கோவிந்தன், இவர்கள் பற்றிய பாடல்களும், இறைவா! இறைவா’ என்ற தனிப்பாடலும், 'கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் காணப்பெறும் 23 பாடல்களும், தோத்திரப் பாடல்கள் வேதாந்தப் பாடல்கள்' என்ற பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் காணப் பெறும் 14 பாடல்களும் பாரதியாரை ஒரு வைணவச் செல்வராகக் காட்டுகின்றன. 'இதன் (கண்ணன் பாட்டின்) ஆசிரியர் பூரீமான் சி. சுப்பிரமணிய பாரதியாரைத் தமிழ் நாட்டார் அறிவார்கள். ஆனால் அவர் பெருமையை உள்ளபடி அறிந்தவர்கள் மிகமிகச் சிலரே யாவர். பூர்மான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி. மகா பண்டிதர்; தெய்விகப் புலவர்; ஜீவன்முக்தர். இவர் தமிழ்நாட்டின் ரவீந்திரர்’; இவர் எனது தமிழ் நாட்டின் தவப்பயன்...இந்த ஆசிரியரின் காலத் திற்குப் பின், எத்தனையோ நூற்றாண்டுகட்குப் பின், இவர் பாடல்களைத் தமிழ் நாட்டு மாதர் களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக் களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கின்றேன். இந்நூல் வாழ்க! எந்தாய் வாழ்க!” இது கண்ணன் பாட்டுக்கு நெல்லையப்ப பிள்ளை எழுதிய முகவுரையின் பகுதி, உபநிடதக் கூற்று போன்ற பிள்ளையவர்களின் கூற்றின் உண்மையை இன்று நாம் காண்கின்றோம். எல்லாம் வல்ல எம் பெருமானாகிய சர்வேசுவரனுக் கும் ஆன்மகோடிகளாகிய நமக்கும் உள்ள உறவை அறிந்து கொள்வதை சம்பந்த ஞானம்' என்று வைணவ சித்தாந்தம் 1. முதற் பதிப்பின் முகவுரை,