பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 47 என்ற பாசுரப் பகுதியில் தாய்-கன்று உறவினை உவமை யாகக் காட்டித் தந்தை மகன் உறவினைக் காட்டினாலும் அப்பன்' என்ற சொற்றொடர் தாயையே நினைக்கச் செய்கின்றது. கம்பநாடனும் கோசலையைக் குறிப்பிடுங் கால், கன்று பிரி காராவின் துயருடைய கொடி - கம்ப. அயோ. கங்கை-17 என்று கூறுவான். கன்று-காரா உறவு தாய்-மகன் உறவினை நினைவுகூரச் செய்கின்றதன்றோ? கவிஞர் கண்ணனைத் தாயாகக் கருதிப் பாடும்போது பராசக்தியே அவருடைய தாயாகி விடுகின்றாள். எனையாளும் மாதேவி வீரர்தேவி இமையவரும் தொழுந்தேவி எல்லைத் தேவி மனை வாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் - தே வி மலரடியே துணையென்று வாழ்த் தாய் நெஞ்சே." என்று கூறும் கவிஞர்தான் கண்ணனைத் தாயாகப் பாவித்து வழிபடுகின்றார். முதலில் உடலுக்கு உரம் ஊட்டுவதைப் பற்றிப் பேசு கின்றார் கவிஞர் . - உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெ னும் பால் 3. வேதாந். நெஞ்சொடு-2