பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புதுவை (மை)க் கவிஞர் வண்ணமுற வைத்தெனக்கே - என்றன் வாயினிற்கொண் டுட்டுவோர் வண்மை யுடையாள் என்ற பகுதியில் அன்னை பாலூட்டிச் சீராட்டுவதைக் காட்டுகின்றார். மணிவாசகப் பெறுமானும் 'பால் நினைந்துாட்டும் தாய்' என்று அ ன் ைன யி ன் பெருமையை-அருமையை-எடுத்துக் காட்டுவர். தாய்ப் பால் உண்ண உண்ணத் தெவிட்டாதது; இந்தப் பால் உயிரெனும் முலையில் உணர்வாக ஊறுவது. குழந்தை பிறந்தவுடன் அதற்கு வேண்டும் பால் எங்கிருந்து கிடைக்கும் என்பதை அது அறியாது. தாய்தான் தன் முலைக்காம்பை அதன் வாயில் வைத்து ஊட்டுகின்றாள். சக்திதேவிதான் கண்ணம்மா வடிவில் தனக்கு இவ்வாறு ஊட்டுவதாகக் கருதுகின்றார் கவிஞர். அடுத்து, கண்ணம்மா தனக்குக் கதைகள் கூறுவதைக் காட்டுகின்றார். இங்கு அன்னையைக் கவிஞர் அகில உருவமாகக் (Cosmic form) காண்கின்றார். வானமே இவளது கைகள், பூமியே இவளது மடி. கவிஞரைக் கைகளால் அனைத்துத் தன் மடியில் கிடத்திக்கொண்டு கதைகள் சொல்லுகின்றாள். கவிஞர் இந்த நிலையை, கண்ணனெனும் பெயருடையாள், -என்னைக் - காட்டி நிறை வான் எனுந்தன் கையில னைதது மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் ԱՈ 6)T՝ 4. திருவா. பிடித்த பத்து-9