பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 5 I வானத்து மீன்க ளுண்டு - சிறு மணிகளைப் போல்மின்னி நிறைந் திருக்கும் நானத்தைக் கணக்கிடவே - மனம் நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை (நான் + அத்தை - நானத்தை : நான் அதை இது பிராமணர் வழக்கு) வானத்தில் கணக்கிலடங்கா உடுக்களைக் காட்டிய கவிஞர் பூமிக்கு வருகின்றார். முதலில் மலைகளைக் காட்டுகின்றார். நாடு முழுவதும் விளையாடி வரும் நதிகளைக் காட்டுகின்றார். அங்கனம் வரும் நதிகள் இறுதியில் விரிகடல் பொம்மையதில் போய் விழுகின்றன என்கின்றார். அந்தக் கடல்துரை கக்கிப் பாட்டிசைக்கும் என்றும், அந்தப் பாட்டினில் 'ஓம்' என்ற பெயர் ஒலித் திடும் என்றும் கூறுவது அற்புதம், அற்புதம்! அடுத்து, கண்ணம்மா என்ற தாய் பின்னர்த் தமக்குக் கொடுத்தவற்றையெல்லாம் பட்டியலிட்டுக் காட்டு இன்றார். சோலைகளையும் காவினங்களையும் நல்கி அவற்றின் மூலமும் பல நிற மணி மலர்களையும், தருக் களில் தூங்கிடும் கனிகளையும், ஞால முழுதும் நிறைந் திருக்குமாறு நயத்தகும் பொம்மைகளாகக் குவித்து வைத் திருப்பதாகக் கூறுகின்றார். இவற்றின் கோலமும் சுவையும் சொல்லுந்தரமன்று. இன்னும் கண்ணம்மா தனக்கு என்னென்ன தந்துள் ளாள்? தின்பதற்குப் பண்டங்கள், செவி தெவிட்டா நற் பாட்டுகள், நன்றாகப் பழகுவதற்கு மெய்த்தோழர்கள் இவற்றையெல்லாம் தந்துள்ளாள். மேலும்,