பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 5.3 சாத்திரம் கோடி வைத்தாள்: - அவை தம்மினும் உயர்ந்தோர் ஞானம் வைத் தாள மீத்திடும் போதினிலே - நான் வேடிக்கை புறக்கண்டு நகைப்பதற்கே கோத்தபொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தங் கூத்துகளும் மூத்தவர் பொய்நடையும் - இள மூடர்தம் கவலையும் அவள் புனைந் - தாள வகுப்பில் சில சமயம் வேடிக்கை காட்டுவது போல் பொய் வேதங்கள், மதக் கொலைகள் (எ-டு. சமணர்களைக் கழுவேற்றல், சிலுவைப் போர்கள் போன்றவை), அரசர் தம் கூத்துகள் (எ.டு. துரியோதனன் செயல்கள், இராவணன் தீங்குகள், இரணியனின் அடாத செயல்கள் போன்றவை), மூத்தவர்களின் நெறி தவறிய நடக்கை, நெஞ்சிற் கவலை பயிராக்கும் மூடத்தனம் இவையும் குழந் தையின் பாடத் திட்டமாகின்றன. ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தும் போது ஒரே அறுவையையும் சோர் வடையச் செய்யும் முறையையும் தவிர்க்க வேண்டு மல்லவா? இப் பாடல் பூமிதேவியைப் போற்றும் ஒரு பாட லாகக் கருதலாம். இந்தப் பூவுலகம் முழுவதும் ஒரு திருவிழாக் கோலத்துடன் காட்சியளிக்கும் என்று எமர்சன் என்ற அமெரிக்கக் கவிஞர் கூறுவதை நாம் கேட்டதுண்டு. இதனையொட்டி பாரதியார் இந்த அகிலத்தையே (Universe) ஒரு விசுவரூப தரிசனமாக' (Cosmic vision) காட்டுகின்றார். இயற்கை அன்னை யின்மீது பாரதியார் கொண்ட பேரவாவைப் பாடல் காட்டுகின்றது. இம்முறையில் இவர் ஆங்கிலக்