பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 புதுவை (மை)க் கவிஞர்


கவிஞராகிய வொர்ட்ஸ் வொத்திற்கு ஒப்பாகின்றார் இங்ங்ணம் இயற்கை அன்னையை இயலும் போதெல்லாம் பாராட்டுவது-போற்றுவது - இவர் தம் அழுத்தமான சக்தி வழிபாட்டுக் கொள்கையைச் சார்ந்ததாகும் என்று கருதுவது மிகவும் பொருத்தமாகும். மேலும், தத்துவ ஞானக் கவிஞர் தாயுமான அடிகள்,

பாராதி விண் அனைத்தும் நீயாச், சிந்தை
பரியமட லா எழுதிப் பார்த்துப் பார்த்து"

என்று அகில முழுவதையும் 'விசுவரூப தரிசனமாகக்" கண்டு களிப்பதைப்போலவே, பாரதியாரும் பிரகிருதி மண்டலத்தையே தம் காட்சிக்குள் அடக்கி மகிழ்கின்றார் என்று கொள்வதிலும் தவறில்லை.

கண்ணன் என் தந்தை

சமயச் சான்றோர்கள் எம் பெருமானைத் தந்தை நிலையில் வைத்தெண்ணக் கூடிய இடங்கள் எண் ணற்றவை. எடுத்துக்காட்டாக நம்மாழ்வார் திரு. வேங்கடமுடையானை,

...... திருவேங் கடத்து
என்ஆனை என் அப்பன்."

என்றும், திருக்குறுங்குடி எம்பெருமானை,

குறுங்குடி மெய்ம்மையே
உளனாய எந்தையை'

__________________________________________________ 5. ஆகார புவனம் - 24 6. திருவாய் 3, 9, 1 7. டிெ. 3, 9, 2