பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 55 என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். இந்த ஆழ்வாரே திருவிண்ணகர் சேர்ந்த பிரானை, என் சரண் என்கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே" என்றும், என்அப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்.அப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப் பனுமான தன்னொப்பார் இல் அப்பன்" என்று கூறுவதைக் காணலாம். இதிகாசக் கண்ணன் அச்சில்தான் பாரதியாரின் கண்ணனும் வார்க்கப் பெறுகின்றான். இயற்கைக் கோள்களை நோக்கிச் செயற்கைக் கோள்கள் ஏவப்பெற்று அண்டகோள ஆராய்ச்சி நடை பெறுவது இக் காலம். அண்மையில் (இருபதாண்டுகளுக்கு முன்) ஆளுள்ள அமெரிக்க விண்கலங்கள் ஏவப் பெற்று ஆய்வுகள் நடைபெற்றன. செவ்வாய், வியாழன், வெள்ளிக் கோள்களின் ஆய்வுகள் நடைபெறுகின்றன. இத்தகைய ஆய்வுகள் எல்லாம் பிற்காலத்தில் நடை பெறலாம் என்ற சாத்தியக் கூறுகளையெல்லாம் பாரதியார் கனவு கண்டார் என்று நினைக்கத் தோன்று கின்றது. o o 8. 9. 蕊