பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புதுவை (மை)க் கவிஞர் பூமிக் கெனைய னுப்பினான் - அந்தப் புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு; நேமித்த நெறிப்படியே - இந்த நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே போமித் தரைகளி லெல்லாம் - மனம் போலவிருந் தாளுபவர் எங்க ளினத் தார் சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள் தந்தையவன் சரிதங்கள் சிறிது ரைப் பேன் இந்த விண்வெளியில் நேமித்த நெறிப்படியே பல்லாயிரக் கனக்கான அண்டங்கள் நாடோறும் உருண்டோடு கின்றன. இத்தரைகளிலெல்லாம் உயிரினங்கள் வாழ் கின்றன என்பது கவிஞரின் கணிப்பு. இவற்றையெல்லாம் ஆளுவது மனித இனம்- எங்கள் இனத்தார். ஆதலால் தான் புதன் மண்டலத்திலும் தம் தம்பியர் இருப்பதாகச் செய்யுகின்றார் கவிஞர். இந்த மனித இனத்தின் தந்தை தான் கண்ணன். இவன் வரலாறுதான் இங்குக் கூறப் பெறுகின்றது. முதலில் திருநாமத்தைப் பற்றிக் கூறு கின்றார். நாவு துணிகுவ தில்லை - உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே: யாவரும் தெரிந்திடவே - எங்கள் ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்வதுண்டு; மூவகைப் பெயர்புனைந் தே - அவன் முகமறி யாதவர்கள் சண்டைகள் செய் வார்; தேவர்கு லத்தவன்என் றே - அவன் செய்தி தெரி யாதவர் சிலருரைப் பார்