பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\# பிற்காலத்தில் நடைபெறலாம் என்ற சாத்தியக் கூறு களைப் பாரதியார் கனவு கண்டார் (ப. 55) என்றும் பேராசிரியர் கருதுகின்றார். - 'நிறந்தனிற் கருமை கொண்டான்-அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்' எனும் பாரதியின் பாடல் வரிகளுக்குப் பேராசிரியர் தரும் விள்க்கம்: 'இன்றைய கருமைநிறக் காளையர் பொன்னிற மேனி மங்கையரை விரும்புவதுபோல், கண்ணனும் அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருந்தான் போலும் (ப. 58). நடைமுறை உவமைகளை நகைச்சுவை யாக உதிர்ப்பதில் (ப. 91) பேராசிரியருக்கு நிகர் பேராசிரி பர்தான். உவமைச் சக்கரவர்த்தி’ என்றால் அது பேராசிரியர் ஒருவராகத்தான் இருக்க முடியும். கற்றோர் கூட சங்கம் அமைத்துக்கொண்டு கலர்ட்டா செய்வதை -(ப. 60) பேராசிரியர் எள்ளி நகையாடுகின்றார். வைணவதத்துவத்தைப் போலவே சைவ தத்துவத்தை யும் கரைத்துக்குடித்தவர் பேராசிரியர் என்பது சக்திதாசர் எனும் பகுதியில் (ப. 71-74) வெளிப்படுகின்றது. சக்தி பற்றிய ம்ேலும் சில செய்திகளையும் (ப. 82) தருகின்றார். வசனமும் கவிதையும் ஒன்றாகுமா என்ற வினாவுக்குப் பேராசிரியர் தரும் விளக்கம் (ப. 99) ஏற்புடையதே. பாரதியார் புதுக்கவிதையின் பிதாமகன் (பாட்டன்) ஆகின்றார் (ப. 102) என்பது பேராசிரிய்ரின் முடிவு. 'பாரதி, புதிய தமிழுக்குப் போடப்பட்ட பிள்ளையார் சுழி என்பதில் ஐயமில்லை என்பது பேராசிரியரின் கணிப்பாகும். எளிய நடை, ஆழமான அறிவியல் பூர்வமான திறனாய்வுப் போக்கு, சிக்கலான சமய தத்துவங்களையும் எளிமையாக வெளிப்படுத்தும் பாங்கு. நடைமுறை உவமைகளை வாரி வழங்கும் பான்மை ஆகியவற்றால் பாரதியாரை ஒரு மாமனிதனாகக் காணும் புதுவை (மை)க் கவிஞர் சுப்பிரம்ணிய பாரதியார்: ஒரு கண் ணோட்டாம்” என்ற இந்நூல் தமிழன்னைக்குப் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் சூட்டியுள்ள புத்தம் புதிய ஆபரண்மாகும் என்றால் அது உண்மை; வெறும் புகழ்ச்சியல்ல. - வாழ்க பேராசிரியர்! வளர்க அவர்தம் தமிழ்தொண்டு! சென்னை-113 } நாள் : 18-7-1990 க. கடிகாசலம்