பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 புதுவை (மை)க் கவிஞர் கண்ணன் என் சேவகன் : 'மகாபாரதத்தால் துதுபோனவன் ஏற்றம் சொல்லு கிறது என்பது ரீ வசன பூஷணம். இங்குத் தூதுபோனவன் கண்ணன்; சர்வேசுவரன். பாரதியாரின் இத்தலைப்புள்ள பாடல் கண்ணனின் இந்த எளிமைக் குணத்தைக் காட்டு வதாக அமைந்துள்ளது. என்று கருதலாம். அன்றியும், இப்பாடலில் சேவகர்களின் சேவையையும் எள்ளி நகை யாடுகின்றார். பொதுவாகச் சேவகர்கள்-பணியாளர் கள்-பற்றிப் பாரதி கூறுவது: கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெல்லாம் தாம்மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார். இது பொதுவாக அரசு ஊழியர்கள் உட்பட வேலையாட் களின் பண்பு என்பதை எல்லோரும் அறிவர். ஊதியம் பெறும் அனைவருமே மனோதத்துவப் போக்கில் ஒரே வகையில் அடங்குவர். கற்றோர்கள் கூட இதற்கு விதி விலக்கு அல்லர். இவர்கள் கூட சங்கம் அமைத்துக் கொண்டு கலாட்டா செய்யவில்லையா? கல்லாத பணி யாளரைப் பற்றி பாரதியார் கூறுவது: ஏனடா, நீநேற்றைக்(கு) இங்குவரவில்லை' என்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்: விட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்: பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாள்என்பார்;