பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 61 ஈண்டு வராமைக்கு மூன்று சாக்கு போக்குகள் கூறப் பெறுகின்றன. சில பணியாளர்கள் பொய்யே அவதாரம் எடுத்தது போல் காணப் பெறுவர். சிலர் சொல்வேறு செயல்வேறு என்றிருப்பர். சிலர் புரணி பேசுவதையும் உள்வீட்டுச் செய்திகளை ஊரம்பலப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பர். ஒயாமல் பொய்யுரைப்பர்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்; தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்; உள்வீட்டு செய்தியெல்லாம் ஊரம்பலத் துரைப்பார்: எள்வீட்டில் இல்லை யென்றால் எங்கும் முரசறைவார்; சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டுகண்டீர் இவையெல்லாம் வீட்டுச் சிறு சேவகர்கள், வேலைக் காரிகள் இவர்களிடத்தில் இன்றும் காணலாம். அரசு ஊழியர்கள் இதற்கு விதிவிலக்கு அல்லர். மனித இயல்பு எப்பொழுதும் ஒன்றுதானே. நல்ல சேவகர்களும் இல்லாமல் இல்லை. சரியான கையாட்களாகச் சிலர் செயற்படுவதையும் காணத்தான் செய்கின்றோம். இப்படி ஆள் அமைவது, பெண்டாட்டி அமைவது போல் பூர்வ புண்ணியம்’ என்றுதான் சொல்ல வேண்டும். பாரதியார் காட்டும் கண்ணன் என்ற சேவகன் நல்ல உடல் கட்டுள்ளவன். கண்ணிலே களங்க மற்ற பார்வை; வாயில் இனிமையான பேச்சு; யார்