பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புதுவை (மை)க் கவிஞர் கண்டாலும் 'நல்ல வேலைக்காரன்’ என்ற கருத்து ஏற்பட்டுவிடும். இந்தக் கண்ணன் தனக்கு வேண்டிய கூலி பற்றிப் பேசுகின்றான். தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை; நானோர் தனியாள்: நரைதிரைதோன் ராவிடினும் ஆன வயதிற்கு அளவில்லை; தேவரீர் ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை. கண்ணன் பேச்சினைப் பார்த்தால் இவன் பண்டைக் காலத்துப் பைத்தியத்தில் ஒன்றாகக் காணப்படுகின்றான். வாஷிங்டன் இர்வின் படைத்த ரிப்வான் விங்கிள் என்ற கதை மாந்தனை ஒத்தவனாகத் தெரிகின்றான். செளலப்பிய, செளசீலய குணங்கட்கு பெயர்டோன இதிகாசக் கண்ணனையும் நினைவுபடுத்துகின்றான். இந்தக் கண்ணனைப் பாரதியார் வேலையாளாக அமர்த்திக் கொள்ளுகின்றார். அவன் கவிஞருக்குச் செய்த தொண்டுகளைப் பற்றி அவர் கூறுவதைக் காண்போம். கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன், வீதி பெருக்குகின்றான்.