பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 புதுவை (மை)க் கவிஞர் இங்கிவனை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்! கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி கல்வி, அறிவு கவிதை சிவயோகம் தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஒங்கிவரு கின்றன.காண்! கண்ணனை நான் ஆட்சிகொண்டேன்! கண்கொண்டேன் கண்கொண்டேன் கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே! என்று முழு மனத்துடன்- முழு மன நிறைவுடன்- எக் களிப்புடன் - பேசுகின்றார் கவிஞர். இவ்விடத்தில், கண்ணனை நான் ஆட்சிகொண்டேன்

  • * * * * * * * - - * * * * * * * * * * * * * * * * *

கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே என்ற அடிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. முழுட்சுப் படியிலுள்ள,