பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 65 போக தசையில் ஈசுவரன் அழிக் கும்போது நோக்கவேணும் என்று அழியாதொழிகை." என்ற வாக்கியத்தை நினைவுகூர்கின்றோம். ஈசுவரன் சீவனாகிய தன்னொடு கலந்து பரிமாறும்போது, அவன், தன் மாட்டுக் கொண்டுள்ள பிரேமப்பித்தினால் தாழ நின்று பரிமாறி, தன்னுடைய சேஷத்துவத்தை (அடிமைத் தன்மையை) அழிக்குங்கால், நம் சேஷத்துவத்தை நாம் நோக்கிக் கொள்ள வேண்டும்’ என நினைத்து சீவனாகிய தான் பின் வாங்கி, அவன் போகத்தைக் கொடுக்காம லிருக்க வேண்டும் என்பது இவ் வாக்கியத்தின் பொருள். ஈசுவரன் சேதனனை விநியோகம் கொள்ளல் இரண்டு வகைப்படும். இவற்றுள் அவன் தலைவனாகவே இருந்து இவனை அடிமையாக வைத்துப் பரிமாறுதல் ஒரு வகை. சில சமயம் அவன் இவனோடு கலந்து போகத் துய்க்கக் கருதுவான். அவ்வமயம் ஈசுவரன் சேதநனை அடிமை கொள்பவன் போன்று, இவனிடம் நெருங்கி, இவன் மாட்டுத் தனக்குள்ள வேட்கை மிகுதியால் இந்த சீவான்மாவைத் தலைவனாக வைத்துத் தான் அடிமை யாக இருந்து, இழிதொழில் செய்து அவ்விதத்தில் சேத நனை வினியோகம் கொள்ளுதல் மற்றொரு வகை. இதற்குக் குசேலர் வரலாற்றைச் சான்றாகக் கொள்ள லாம். இங்ங்ணம் கண்ணன் தன்னிடம் சேவகனாக வந்துள்ளதைக் கற்பனையில் நினைந்து அவன் கைங்கரி யத்தை ஏற்றுக் கொள்ளுகின்றார் கவிஞர்; கண்ணனை நான் ஆட்சி கொண்டேன்' என்கின்றார். கண்ணனை 10. முமுட்சு - 92 7–5