பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎夺 புதுவை (மை)க் கவிஞர் ஆட்சி கொள்ளக் காரணமும் உள்ளனவே என்றதனால் கண்ணன் புரியும் சேவகங்களுக்கு இசைந்து கொடுக் கின்றார் என்று கொள்ளல் வேண்டும். பாரதியாரும் மானச நிலையில் குசேலரை ஒக்கின்றார். கண்ணன்என் சேவகன்” என்ற பாடல் இப்படியெல்லாம் நாம் சிந்திக்க இடந்தருகின்றது. பரிபாடலில் திருமாலைப் பற்றி வரும் பாட லொன்றில், அவரவர் ஏவ லாளனும் நீயே அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே." என்று வருதலையும் சிந்திக்கலாம். அவரவர் நினைத்த வற்றை முடித்துத் தருதலால், இறைவன் அவரவர்கட்கு ஏவலாளன் ஆகின்றான். அவரவர் செய்யும் அறம் முதலிய நாற் பொருட்கும் காப்பாகவும் (அரணமாகவும்) அமைகின்றான் என்ற கருத்தும் பாரதியாரின் இப் பாடலின் கருத்தை ஒரு புடை ஒத்துள்ளதைக் கண்டு மகிழ. 演}f「土沿。 கண்ணன்-என் அரசன், குருவும் சீடனும், கண்ணம்மா-என் குழந்தை போன்ற பாடல்களை எடுத் துக்காட்டி விளக்குவதற்கு நேரம் இல்லாமையால் அவை: விடப்படுகின்றன. கண்ணன்-என் காதலன் என்ற பாடல்: களை(ஐந்து) பரமான்மா சீவான்மா உறவைக் குறிப்பிடுவ: தாகக் கொண்டு விளக்க முடியும். ஆயினும், கண்ணம்மாஎன் காதலி என்ற தலைப்பிலுள்ள ஆறு பாடல்களிலும் இந்த உறவு முறையை மாற்றிப் பேசுகின்றார். இக் கவிதைகளில் இறைவன் தலைவியாகவும், தான் (கவிஞர்) காதலனாகவும் பேசப்படுகின்றனர். மரபுக்கு மீ றிய இம் 11. பரிபா. 4. அடி (72 - 73) :