பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 57 முறையைப் பாரதியார் எங்கோ தெரிந்திருக்க வேண்டும், இதனைச் சிந்தித்து ஆராயுங்கால் 'திருவாசக வியாக்கி யானம் எழுதிய (1834) சீகாழித் தாண்டவராயரின் குறிப்பு தென்படுகின்றது. அக்குறிப்பு : பத்தி முத்திக்கு உவமை பெத்தம்; பேரின்பத்திற்கு உவமை சிற்றின்பம் என வைத்து, உடம்பையுடைய யோகிகள்பால் உற்ற சிற்றின் பம், அடங்கத் தன் பேரின்பமாக, பேரின்பமான பிரம்மக் கிழத்தியோடு ஒரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக, சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம் பொருளாக நாயகன் பக்குவான்மாவாக, தோழி திருவரு ளாக, தோழன் ஆன்மபோதகமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித்தாயாக, மேலும் நாயகி கூற்றெல் லாம் நாயகன் கூற்றாகவும் நிகழ்ந்துவரும். அவை அது பூதியாற் காண்க.’’ என்பது, இந்தக் குறிப்பில் நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மாவாக என்ற பகுதி மட்டிலும் பாரதியாரின் மனத்தைக் கவர்ந்திருத்தல் வேண்டும்; இதனை அடிப்படையாகக் கொண்டே இப் பாடல்களில் சீவான்மா-பரமான்மா உறவு முறையை, தோசையை திருப்பிப் போடுவதுபோல,மாற்றியமைத்துள் ளார் என்று கருதலாம். அல்லது கவிஞர்களுகே உரிய தனி உரிமத்தைக் கொண்டு (Poetical license) இங்ங்ணம் அமைத் துக் கொண்டார் என்று கொள்ளினும் இழுக்கில்லை. இந்த அடிப்படையில்தான் இந்த ஆறு பாடல்களையும் ஆராய் தல் வேண்டும். கண்ணன்-என் காந்தன் : இந்தப் பாடலும் தனி விளக்கத்திற்கு உரியது. தமிழ் இலக்கியத்தில் சிறந்த பகுதி அகத்துறை இலக்கியம் ஆகும். இது களவு, கற்பு என்று இருவகையாகப் பகுத்துப் பேசப் படும். களவுக் காலத்தில் தலைவனும் தலைவியும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்டிருக்கும் அன்பு-ஆராக்