பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尊喜 புதுவை (மை)க் கவிஞர் காதல்-இவ்வளவு அவ்வளவு என்று எடுத்துக் கூறல் இயலாது. இக் காலத்தில் தலைவன் கையுறை கொண்டு தலைவியைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும் பாலும் இக்கையுறை தழை, மலர், மாலை போன்ற பொருள்களாகவே இருக்கும். 'கையுறை பற்றிய செய் தியை இறையனார் களவியல் 'திருக்கோவையார்’, தஞ்சைவாணன் கோவை' போன்ற நூல்களில் காணலாம். இங்குக் காந்தன்' என்ற பெயர் களவுக் காலத்தில் உள்ள தலைவனுக்குப் பாரதியார் சூட்டிய பெயராகும். இங்ஙனமே இக்கவிஞர் பெருமான் அத்தினபுரத்துப் பெண்களை மலர்விழிக் காந்தங்கள்' என்று காட்டுவ தையும் ஈண்டு நினைவுகூரலாம். களவு வாழ்க்கையில் காதலர்கள் ஒருவரை யொருவர் சந்திக்கும் வாய்ப்புகள் அருகியிருக்கும்போது இருவர் மட்டும் காதல் உணர்ச்சி காந்த சக்திபோல் உறைப்பாக இருக்குமாதலால் ஆண் மகனைக் காந்தன்' என்றும், பெண்மகளைக் காந்தம்' என்றும் சுட்டியிருப்பதும் எவ்வளவு பொருத்தமாகத் தோன்றுகின்றது. தவிர, காதலிக்குக் காதலன் காந்தன்' -ஈர்ப்பவன், ஈர்க்கப்படுபவன்-என்ற நிலையில் இருப்பான். ஆனால், இங்கு ஈர்ப்பவள் பெண்ணே ஆவள். ஆதலால் அவள் காந்தம்' என்றே தானியாகு பெயரால் உருவகமாகக் குறிக்கப் பெற்றிருத்தல் சிந்தித்து மகிழத்தக்கது. ஒர் இலாடகாந்தம். அல்லது கட்டைக் காந்தத்தின் அருகில் ஒரு காந்த ஊசி வைக்கப்பெறுங்கால் அந்தக் காந்த ஊசி சுற்றியலைவதை நினைவுகூரலாம். உலக வாழ்வில் பெரும்பாலும் ஆணே பெண்ணை நாடி அலைகின்றானேயன்றி பெண் ஆணை நாடி அலைவ தில்லை. ஆயின், இராமாயணத்தில் சூர்ப்பனகை (பெண்) 12. பாஞ்சாலி சபதம்-14