பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

المصنفة و சுப்பிரமணியபாரதியார் : ஒரு கண்ணோட்டம் 73 அது ஏகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலானது. அது காணப்படும் உருவ மற்றது; காலம் இடம் இவற்றால் அளவு படுத்தப்பெறாதது. குணங்களும் இல்லை; அடை யாளங்களும் இல்லை; மல மற்றது, என்றும் அழியாதிருப் பது; ஆன்மாக்களுக்கு அறிவாய் நிற்பது; சலிப்பற்றது: அளவு படாததால் போக்குவரவாகிய அசைவு இல்லாதது. காட்சிக்கும் கருத்துக்கும் அப்பாற்பட்டது. இந்நிலையில் பதி பரசிவம்' என்று வழங்கப்பெறும், தாயுமான அடி களின் பரசிவ வணக்கம்' என்பதிலுள்ள பாடல்களால் இதனைத் தெளியலாம். அங்கிங்கெனாதபடி' என்ற முதற்பாடலில் சிவத்தின் சொரூப இலக்கணம் நுவலப் பெற்றிருப்பதைக் கண்டு தெளியலாம். அடுத்து பதியின் தடத்த இலக்கணத்தை விளக்கு வேன். இது குறிகுணங்களோடு கூடிய நிலை. தன்னையே நோக்கி நிற்கும் பரசிவம் அந்நிலையினின்றும் நீங்கி உலகத்தை நோக்குங்கால் தனது சிறப்பியல்புகளில் ஒன்றா கிய பெருங்கருணை காரணமாக உயிர்களின் பொருட்டுத் தானே தன் விருப்பத்தால் தனது ஆற்றலை (சக்தியை)க் கொண்டு பல்வேறு நிலைகளை உடையதாக இருக்கும். இந்த நிலைகளே பதியின் தடத்த நிலைகளாகும். இவை யாவும் பதியின் அனந்த சக்தியாகிய அளவில்லாத ஆற்ற லால் வருவனவாதலின், பதியின் தடத்த நிலைகள் யாவும் அதன் சக்தியினால் ஆவனவாகும் என்பது அறியத்தகும்; இதனால் சொரூப நிலையில் பதி சிவம் எனப்படும். தடத்த நிலையில் அது சக்தி என்று பேசப்படும் சொரூப நிலையில் சக்தி செயற்படாது அடங்கியிருத்தலால் பதி 'சிவம்’ என ஒன்றேயாக இருக்கும்; சக்தி செயற்படும் தடத்த நிலையில் சிவம் அதனோடு அச் செயலையெல் லாம் உடன் இயைந்து இயற்றி நிற்றலால் சிவமும் சக்தியும் இரண்டாய்-அம்மை அப்பனாய்-மாதொரு பாக னாய்-தையல் பாகனாய்-இரண்டாய்த் தோற்றம் அளிக்கும்.