பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ヴ棄。 புதுவை (மை)க் கவிஞர் தடத்த நிலையில் பதி சக்தியினால் பல நிலைகளை யுடையது. இந்த நிலையில்அதற்கு உருவம் உண்டு: தொழில் உண்டு; அவற்றிற்கு ஏற்பப் பல பெயர்களும் உண்டு. ஆயினும் இவையனைத்தும் இறைவனின் அருள் காரணமாக ஏற்பட்டவையேயன்றி வெறும் கற்பனை யல்ல என்பது அறியப்படும். சொரூப இலக்கணம் எப்படி உண்மையோ, அப்படியே தடத்த இலக்கணமும் உண்மையாகும். தடத்த நிலையில் சிலவற்றை ஈண்டு விளக்குதல் பொருத்தமுடையதாகும். சொரூப நிலையில் பதி பரசிவம் என நிற்குங்கால் அதன் சக்தி 'பராசக்தி' என வழங்கப் பெறும், அஃது உயிர்களின் அறிவை விளக்கி நிற்கும் அறிவு வடிவமானது. அந்த அறிவே சக்தியின்சொரூபம். பாரதியாரின் சக்தி வழிபாடெல்லாம் இந்தச் சக்தியை நோக்கியே யாகும் என்று கருதலாம். 'மூன்று காதல்’ என்ற பாடலில் மூன்றாவதாக அன்னை பராசக்தியின்மீது இவர் காதல் கொண்டதாகக் கூறுவர். இவள் ஒரு நாள் இரவில் கவிஞரிடம் வருகின் றாள். கன்னிவடிவமாக வருகின்றாள். இவளைக் கண்ட களிப்பில், அன்னை வடிவமடா ! - இவள் ஆதிபராசக்தி தேவியடா ! -இவள் இன்னருள் வேண்டுமடா ! - பின்னர் யாவும் உலகில் வசப்பட்டுப் போமடா! என்று எக்களிப்புடன் தம் மகிழ்ச்சிப் பெருக்கை வெளியிடு கின்றார். வாணி, சீதேவி, பார்வதி-இம் மூன்று தேவி யரும் ஒன்றாக இலங்குபவளே மாதா பராசக்தி என்பது கவிஞரின் அதிராக் கொள்கையாகும். எனவே, - 2. தோ, பா. 64. மூன்று காதல்-4