பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் Ꮬ3 எல்லாச் சக்திகட்கும் இதுவே முதல் மூலமாக இருப்ப தால் இப்பெயரைப் பெறுகின்றது. இச் சக்தி உயிர்கட்கு இறைவனைக் காட்டாமல், உலகத்தையே காட்டி அவற்றைப் பிறப்பு-இறப்புச் சுழலில் உழலச் செய்வதால் அது திரோதான சக்தி' என்ற திருப்பெயரையும் உடையது; திரோதாயி என்றும் வழங்குவது உண்டு. திரோதானம் - மறைப்பது; திரோதாயி - மறைத்தலைச் செய்வது. இந்தச் சக்தியையே பாரதியார், பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை: கரிய மேகத் திரளெனச் செல்லுவை; காலு மின்னென வந்துயிர் கொல்லுவை; சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை: சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை; விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை: வெல்க காளி யென தம்மை வெல்கவே." என்ற பாடலை அடுத்து வரும் பாடல்களெல்லாம் இந்தச் சக்தியையே குறித்தனவாகும் என்று கருதலாம். திரோதான சக்தி உலகத்தைத் தொழில் படுத்த வேண்டும் என இச்சித்தலால் அஃது இச்சா சக்தி எனப் பெயர் பெறுகின்றது. இதற்குரிய வழியை அறிவதால் ஞான சக்தி என்ற திருநாமத்தையும் ஏற்கின்றது. அவ் வழியே தொழிற்படுத்தி நிற்றலால் கிரியா சக்தி என்ற திருப்பெயரையும் கொள்கின்றது. எனவே பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று இவை பஞ்ச சக்திகள்’ என்று தொகை நிலை பெற்றுத் திகழ்வதையும் தெரிந்துகொள்ளலாம். 27. டிெ மகாசக்தி வாழ்த்து-3