பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 புதுவை (மை)க் கவிஞர் இச்சா சக்தி எப்பொழுதும் செயற் பாட்டுக்குத் துணையாய் நிற்கும். மற்றைய இரண்டும் ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் இணைந்தும் ஏறியும் குறைந்தும் செயற்படும். இதனால் தடத்த நிலைகள் பெரும் பான்மை யாக ஐந்து வகைப்பட்டு நிற்கும். இவற்றையும் நாம் தெரிந்து தெளிதல் வேண்டும். ஞான சக்தி மாத்திரம் தொழில் படும் நிலையில் பதி சிவம் என நிற்கும்; கிரியா சக்தி மாத்திரம் தொழிற்படும் நிலையில் பதி சக்தி என நிற்கும்; இரண்டும் ஒப்பத் தொழிற்படும் நிலையில் பதி சதாசிவம் என நிற்கும். ஞானசக்தி குறைந்து நிற்க கிரியா சக்தி மிக்குத் தொழிற்படும் நிலையில் பதி மகேசுவரன் என நிற்கும். கிரியா சக்தி குறைந்து நிற்க ஞான சக்தி மிக்குத் தொழிற்படும் நிலையில் பதி வித்தை என நிற்கும். இவற்றைத் தெளிந்தால் பாரதியாரின் சக்திப் பாடல்களில் பொதிந்துள்ள சக்தியின் பரிணாம சிறப்புகளை நன்கு தெளியலாம். மேற் கூறியவற்றால், சொரூப நிலையில் இறைவன் த்ன்க்கென்று ஒர் உருவும், தொழிலும், பெயரும் இல்லாத வனாயினும் தடத்த நிலையில் உயிர்களின் பொருட்டுப் பலபல உருவும் தொழிலும் பெயரும் உடையவனா கின்றான் என்பதை அறிய முடிகின்றது. இதனைத் தம் அநுபூதி நிலையில் தெளிந்த மணிவாசகப் பெருமான், ஒருநாமம் ஒர் உருவம் - ஒன்றுமிலார்க் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ ?98 என்று அருளிச் செய்துள்ளமை ஈண்டு நினைத்தல் தகும். இவை தடத்த நிலையேயன்றி கற்பனை அல்ல என்பதை நாம் உளங்கொள்ளல் வேண்டும். 28. திருவா. திருத்தெள்ளேனம்-1