பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. புதுவை (மை)க் கவிஞர் என்பது பிரும்மத்தைப் பற்றிய பாடல். 'வடமொழியில் 'ஓம்' என்னும் சொல்லுக்கு "ஆம்" என்றே பொருள். எவ்விடத்தும் இல்லை யாதலின்றி "ஆம்" என இருத்தல் பற்றியே, வேதம் பிரும்மத்திற்கு ஓம்’ எனும் பெயர் கொடுக்கப் பட்டிருப்பதறிக’’ என்ற பாரதியாரின் குறிப்பு பிரும்மத்தை நன்கு விளக்குகின்றது. சுயசரிதைப் பகுதியிலுள்ள, அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின் மீது தனியர சாணை பொழுதெலாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை யருளாய் குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே." என்ற பாடலும் பிரும்மத்தைக் குறிப்பிடுவதைக் காணலாம். இன்னும் புதிய ஆத்திசூடி" என்ற பகுதியின் 'காப்பும் பரம்பொருள் வாழ்த்தாக அமைந்துள்ளதைக் காணலாம். ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து - மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துன ராது 2. பா. க. சுயசரிதை-49