பக்கம்:புது டயரி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

புது டயரி


புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். “இப்போதும் தெரியவில்லையே!” என்றான்.

இப்படியே சில கண்ணாடிகளையும் சில புத்தகங்களையும் மாற்றி மாற்றிக் கொடுத்தார் கடைக்காரர். “தெரியவில்லை” என்றே சொன்னான் வந்தவன்.

பேச்சுவாக்கில் கடைக்காரர். “நீங்கள் எது வரைக்கும் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நானா? நான் படிக்கவே இல்லை. பக்கத்து வீட்டுக் கிழவர் கண்ணாடி இல்லாமல் எழுத்தைப் படிக்க முடியவில்லை. கண்ணாடி போட்டுக் கொண்ட பிறகு எழுத்து அவருக்குத் தெரிகிறது. எனக்கும் கண்ணாடி போட்டால் படிக்க வரும் என்றல்லவா நினைத்தேன்” என்று அந்த ஆசாமி சொன்னான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/115&oldid=1151597" இலிருந்து மீள்விக்கப்பட்டது