பக்கம்:புது டயரி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது டயரி

5

 வருஷம் பட்ஜெட்டில் வரிகளெல்லாம் உயரும் என்று சொல்கிறார்களே!” என்றார். நான், “அப்படியா!வருஷம் பிறக்கிற போதே ஜனவரி வந்துவிடுகிறது. அதனுடைய பலன் மார்ச்சு மாதப் பட்ஜெட்டில் தெரியும்” என்று ஒரு ஜோக்கை வெடித்தேன்.

நண்பர்கள் விடைபெற்றுப் போனார்கள். மாலை நேரம் வந்துவிட்டது. நேரே என் அறைக்குப் போய் என் மேஜையைத் திறந்தேன். என் அருமையான டயரியை எடுத்து வைத்துக்கொண்டேன். இன்று யார் யாரைப் போய்ப் பார்த்தோம் என்று எண்ணிப் பார்த்தேன். எல்லோரையும் நினைவுக்குக் கொண்டு வந்து எழுதினேன். பிறகு என்னைப் பார்க்க வந்தவர்களையும் எழுதினேன். மறவாமல் நான் பேசிய சிலேடையையும் ஜோக்கையும் இடையிலே பெய்தேன். கோயிலுக்குப் போனதை எழுதினேன்.

டயரிப் பக்கத்தில் முக்கால் பங்கு நிரம்பி விட்டது. என் வயிறே முக்கால் பங்கு நிரம்பி விட்டது போன்ற திருப்தி உண்டாயிற்று. அதற்கு மேல் எழுதவில்லை; சோம்பல் வந்துவிட்டது. இப்படியே எழுதி எழுதி நிச்சயமாக இந்த டயரி ஒர் அற்புதச் செய்திக் களஞ்சியமாகத் திகழப் போகிறது என்று பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

மறுநாள் எழுந்தேன். டயரியை எடுத்தேன். முதல் நாள் எழுதியதை எல்லாம் ஒரு முறை படித்துச் சுவைத்தேன்; பிறகு ‘இன்று ஜனவரி இரண்டாந்தேதி’ என்று எழுதினேன். அப்போது, ‘இது என்ன பைத்தியக்காரத்தனம் மேலேதான் அச்சுப் போட்டிருக்கிறானே! அதை மறுபடியும் ஒவ்வொரு நாளும் எழுத வேண்டுமா?’ என்று எண்ணி எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன். ‘சரி,இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/12&oldid=1149389" இலிருந்து மீள்விக்கப்பட்டது