பக்கம்:புது டயரி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் புத்தகங்கள்

117

 பழைய காலத்திலேயே—அதாவது அழகழகாகப் பைண்டு செய்த புத்தகங்கள் இல்லாமல் ஓலைச்சுவடிகள் இருந்த காலத்திலேயே-இப்படிப்பட்ட புத்தகம் காத்த பூதங்கள் இருந்தன என்று தெரிகிறது.

“புத்தகமே சாலத்
தொகுத்தும் பொருள்தெரியார்,
உய்த்துஅகம் எல்லாம்
நிறைப்பினும் மற்று அவற்றைப்
போற்றும் புலவரும்
வேறே; பொருள்தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு”

என்று நாலடியாரில் ஒரு பாட்டு வருகிறது. வீடு முழுவதும் புத்தகங்களை நிறைத்து வைத்துப் பூட்டி வைக்கிற புலவர்களும் இருந்தார்களாம்! அந்தக் காலத்திலேயே. அப்படியானால் இந்தக் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.

சில பேர் கெளரவத்துக்காகப் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார்கள். இன்ன புத்தகம் தம்மிடத்தில் இருக்கிறதென்பது கூடத் தெரியாது. நூலுக்குள்ளே என்ன இருக்கிறது என்றும் தெரியாது. யாராவது ஏதாவது கேட்டால் தம்மிடம் இல்லை என்று சொல்லி விடுவார்கள். ஏதாவது சுவையான கருத்து இந்த நூலில் இருக்கிறது என்று யாராவது சொல்லும்போது அதை முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை சிலருக்கு உண்டாகும். முன்னே பின்னே புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால்தானே தெரியும்? அப்போதைக்குப் போய்ப் புத்தகத்தைத் துருவினால் இருக்குமிடம் தெரியுமா?

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முன்பு சேதுஸம்ஸ்தான மகாவித்துவான் இரா. இராகவையங்கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/124&oldid=1152391" இலிருந்து மீள்விக்கப்பட்டது