பக்கம்:புது டயரி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

புது டயரி

 அன்று காலையில் திருக்குறள் பரிமேலழகருரை படித்துக்கொண்டிருந்தேன். திருமுருகாற்றுப் படையையும், அப்பர் தேவாரத்தையும் புரட்டிப் பார்த்தேன். திருக்குறளைப் படித்தேன் என்று பொதுவாக எழுதுவதைவிட இன்ன இன்ன அதிகாரம் படித்தேன் என்று எழுதலாம் என்று தோன்றியது. அப்படியே எழுதினேன்.

திருமுருகாற்றுப்படையை எப்படி எழுதுவது? கந்தனுக்கும் கண்ணனுக்கும் உள்ள ஒப்புமையைக் குறித்து நான் பேசுவதுண்டு. கண்ணன் கையில் வேல் உண்டு; கந்தன் கையில் குழல் உண்டு என்று சொல்லி, ‘நின்கையில் வேல் போற்றி’ என்ற ஆண்டாள் பாசுரத்தையும் ‘குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன்’ என்ற திருமுருகாற்றுப் படை அடியையும் மேற்கோள் காட்டுவேன். இப்போது அதையும் அதைச் சார்ந்த இரண்டு மூன்று அடிகளையும் பார்த்தேன் இதை எழுதலாமா?

அப்போது பின் சந்ததியார்கள் இதைப் பார்க்கப் போகிறார்கள் என்ற ஞாபகம் வந்தது. திருமுருகாற்றுப் படையையும் அப்பர் தேவாரத்தையும் படித்தேன் என்று எழுதலாம். முழுமையும்,படித்ததாக அவர்கள் நினைத்துக் கொள்ளட்டுமே! அதனால் நம்முடைய பெருமைதானே உயரும்? அப்படியே எழுதினேன்.

அப்பொழுது என் மனைவி பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்; “என்ன எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நாட் குறிப்புப் புத்தகம்” என்று மிடுக்காகப் பதில் சொன்னேன்.

“அந்தப் புத்தகம் எதைப் பற்றி?”

“டயர் தெரியாது? அதுதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/15&oldid=1149392" இலிருந்து மீள்விக்கப்பட்டது