பக்கம்:புது டயரி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காது குத்தாதே!

“எனக்குக் காது குத்தாதே; எனக்கு எல்லாம் தெரியும்” என்று அன்பர்கள் பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஒருவரை நம்முடைய கருத்துக்கு இணங்கச் செய்வதற்காக நாம் காரணங்களை எடுத்துச் சொல்லும்போது, நாம் சப்பை கட்டுவதாக எண்ணி அப்படிச் சொல்வது வழக்கம். காது குத்துவதற்கும் நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதற்கும் என்ன சம்பந்தம்?

இன்னும் சில சமயங்களில், “ஏன் அப்பா, எனக்குக் குல்லாப் போடுகிறாய்?” என்று நாம் கேட்பதுண்டு. அப்போதுகூட நம்மைத் தம்வழிப் படுத்துவதற்காக யாரேனும் ஒருவர் நம்மைப் புகழ்ந்தால் அப்படிச் சொல்கிறோம். குல்லாப் போடுவதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

மேலே சொன்ன காது குத்துவதும், இந்தக் குல்லாப் போடுவதும் வெவ்வேறு செயல்களைச் சொல்லளவில் குறித்தாலும், இரண்டும் கிட்டத்தட்டத் தம்முடைய கருத்துக்கு இணங்கும்படி செய்வதையே புலப்படுத்துகின்றன. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

இந்த இரண்டும் மதமாற்றம் செய்பவர்களின் செயல்களிலிருந்து எழுந்த வார்த்தைகள். இந்துக்களாக இருந்தவர்களை முகம்மதியர்களாக மாற்றும்போது அவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/154&oldid=1153034" இலிருந்து மீள்விக்கப்பட்டது