பக்கம்:புது டயரி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காது குத்தாதே!

149

 அடையாளங்கள் மாறினாலும் அவற்றினூடே உள்ள பொதுக் கருத்தாகிய மனம் மாற்றுதலைக் குறிக்க அந்த வார்த்தைகளெல்லாம் இப்போதும் வழங்கி வருகின்றன.

சமயபேத உணர்வால் மிகவும் வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்வதுண்டு, ஒரு சைவரிடம் ஓர் இளைஞன் போனான். சைவர், “உன் பேர் என்ன அப்பா?” என்று கேட்டார். அந்த இளைஞன், “சிவராமலிங்கன்” என்றான். கேட்ட சைவர் மிகவும் குதூகலத்துடன் கையைக்கொட்டி, “அப்படித்தான் நசுக்க வேண்டும்; அப்படித்தான் நெருக்க வேண்டும்!” என்றாராம். இளைஞன் ஒன்றும் தெரியாமல் விழித்தான். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான். “இந்தப் பக்கம் சிவன்; அந்தப் பக்கம் லிங்கன்; இரண்டு பேருக்கும் நடுவில் ராமன் அகப்பட்டு நசுங்குகிறான்; அதுதான் சரி” என்று சைவர் விளக்கினாராம்: பாவம்! அந்த இளைஞருடைய தந்தையார் சைவ வைஷ்ணவ சமரச எண்ணத்தோடு சிவராமலிங்கன் என்று தம் மகனுக்குப் பெயர் வைத்திருக்க, அந்தச் சைவர் ராமனை நசுக்க அப்படி வைத்ததாகக் குதூகலித்தாராம்.

மத பேத உணர்ச்சியில் சைவரோ, வைஷ்ணவரோ, சைனரோ, பைளத்தரோ, கிறிஸ்தவரோ யாரும் விலக்கு அல்ல.

ஒரு வைஷ்ணவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவருக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்ச்சி வந்தால் அங்கிருந்து திருவானைக்காவலுக்கு ஓடி வந்து அவ்வூர்க் கோயிலின் திருமதில் சுவருக்குக் கீழே இருப்பாராம். ஒரு நாள் அப்படிச் சிறுநீர் கழித்தபோது மதில் மேல் ஒரு காக்கை தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்ததாம். அப்போது பெயர்ந்திருந்த கல்லொன்றைக் காலால் இடறவே, அது கீழே இருந்த வைஷ்ணவர் தலையில் விழுந்து காயம் உண்டாக்கியது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/156&oldid=1153040" இலிருந்து மீள்விக்கப்பட்டது