பக்கம்:புது டயரி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

புது டயரி


(இராச்சூழும் சோலை பொரும் கொண்டை-இரவைப் போல இருள் சூழ்ந்திருக்கும் சோலையைப் போன்ற அடர்ந்த கூந்தலை உடைய)

திம்மி என்ற பொதுமகளோடு கம்பர் ஒரிரவைக் கழித்ததாகவும், அப்போது பட்ட அவஸ்தையைக் குறித்து இப்படிப் பாடியதாகவும் சிலர் சொல்லுவதுண்டு. எப்படியானால் என்ன? பாஷை புரியாத சங்கடத்தில் அவர் அகப்பட்டுக் கொண்டு விழித்தார் என்பது உண்மை.

ஒர் ஆங்கிலேயர் பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவல்லிக்கேணி ரோடில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு சாஸ்திரிகள், ஏதோ அவசரமாகப் போகிறவர் வெகு வேகமாக அவரைக் கடந்து சென்றார், அந்த அவசரத்தில் அந்த வெள்ளைக்காரரை இடித்துக்கொண்டு போனார். அதனால் ஆங்கிலேயர் கையிலிருந்த பொருள் கீழே விழுந்து, அவருக்குக் கோடம் வந்துவிட்டது. ஆங்கிலத்தில் இரண்டு மூன்று வசைகளைச் சொன்னார். அதைக்கேட்ட சாஸ்திரிகளுக்கும் கோபம் வந்துவிட்டது. அவருக்கு அதிகமாக வசவு வார்த்தைகள் சொல்லிப் பழக்கம் இல்லை என்றாலும் கோபம் கொண்டவராய். “கத்திரிக்காய், வாழைக்காய், புடலங்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், அவரைக்காய், பாகற்காய்” என்று படபடவென்று சொன்னார். அவர் சொல்லும் தொனியினால் அவர் தம்மை வைகிறாரென்று எண்ணிக்கொண்டார் வெள்ளைக்காரர். அவருக்குக் கோபம் வரவில்லை; வியப்புத்தான் உண்டாயிற்று. “அட தமிழில் வைய இத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவா என்றுதான் அவர் ஆச்சரியப்பட்டாராம்.

கும்பகோணம் ஆஸ்பத்திரிக்கு ஒரு முதியவர் தம் பேரனை அழைத்துக் கொண்டு மருந்து வாங்கப் போனார். அவர் கிராமத்திலிருந்து வந்திருந்தார். ஆஸ்பத்திரியையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/183&oldid=1153236" இலிருந்து மீள்விக்கப்பட்டது