பக்கம்:புது டயரி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரியாத சங்கடம்

177

 பார்த்ததில்லை. டாக்டரிடம் உடம்பைக் காண்பித்தார். அவர் மருந்து எழுதிக் கொடுக்க, அதைக் கம்பவுண்டரிடம் காட்டி மருந்து வாங்கிக்கொண்டார். ஆஸ்பத்திரியையும் அங்குள்ள அமைப்புக்களையும் பார்த்து அவர் வியப்பில் மூழ்கியிருந்தார். வீட்டுக்குத் திரும்பும்போது தம் பேரனை ஆஸ்பத்திரியைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார்.

“என் மார்பில் குழாய் வைத்துப் பார்த்தாரே, அவர் யாா்?”

“அவர்தாம் ஸ்ர்ஜன்.”

“அவருக்கு என்ன சம்பளம்?”

“ஐந்நூறு ரூபாய் இருக்கும்.”

“மருந்து கொடுத்தாரே; அவர் யார்?”

“அவர் கம்பவுண்டர்.”

“அவருக்குச் சம்பளம்?”

“அறுபது ரூபாய் இருக்கும்.”

“அட அறுபது ரூபாய் வாங்குகிறவனை மரியாதையோடு கம்பவுண்டர் என்கிறாய், ஐந்நூறு ரூபாய் வாங்குகிற வரை ஸர்ஜன் என்று மரியாதையில்லாமல் ஒருமையில் சொல்கிறாயே!”

“பின்னே எப்படிச் சொல்ல வேண்டும், தாத்தா?” “பெரிய உத்தியோகஸ்தரை ஸ்ர்ஜர் என்றும், மருந்து தந்தவரைக் கம்பவுண்டன் என்றும் சொல்” என்று தாத்தா சொன்ன போது பேரன் சிரிக்காமல் என்ன செய்வான்? பாஷை புரியாத சங்கடந்தானே இதுவும்?

என்னுடைய ஆசிரியப் பெருமாளாகிய மகாமகோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/184&oldid=1153238" இலிருந்து மீள்விக்கப்பட்டது