பக்கம்:புது டயரி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

புது டயரி


ஆயினும், அவர்கள் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்தபோது மாணாக்கர்கள் மிகவும் ஆர்வத்தோடு கேட்பார்கள். ஆங்கிலப் பேராசிரியருக்கு உள்ள மதிப்பு அவர்களுக்கும் இருந்தது.

ஒரு நாள் அவர்கள் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். செய்யுட்பாடம் நடந்து கொண்டிருந்தது. ‘அண்டருலகத்தெவரும்’ என்று பாட்டில் ஒரு பகுதி வந்தது. ஐயரவர்கள் ஒரு மாணாக்கனைப் பார்த்து, “அண்டர் உலகம் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அவன் உடனே, “அடியில் உள்ள பாதாள லோகம்” என்றான். அண்டர் என்பது தேவரைக் குறிக்கும். அண்டர் உலகம் என்றால் தேவலோகம் என்று பொருள். ஆனால் அந்த மாணாக்கனோ, பாதாள உலகம் என்றான், அது கேட்டு மாணாக்கர்கள் சிரித்தார்கள். அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்று ஐயரவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பையன் அந்த மாணாக்கன் சொன்னதற்குரிய காரணத்தை எடுத்துச் சொன்னபோதுதான் உண்மை விளங்கிற்று. ஆங்கிலத்தில் அண்டர் (under) என்றால் அடி என்று பொருள். ஆகவே அண்டர் உலகம் என்பதற்கு அடியில் உள்ள பாதாள லோகம் என்று அவன் பொருள் சொல்லியிருக்கிறான்.

மற்றொரு சமயம் மாநிலக் கல்லூரிக்குக் கவர்னர் வந்தார். ஐயரவர்கள் அங்கே தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தமிழிலுள்ள பழைய நூல்களைப் பதிப்பித்து நாட்டில் ஒர் இலக்கிய எழுச்சியை உண்டு பண்ணியவர்கள் என்று கவர்னர் அறிவார். ஆகவே அவர்கள் பாடம் சொல்லிக்கொண்டிருந்த அறைக்கு வந்தார். அவர் வரக்கூடும் என்று எண்ணிய ஆசிரியப்பிரான் சில ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வந்து மேசையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/185&oldid=1153239" இலிருந்து மீள்விக்கப்பட்டது