பக்கம்:புது டயரி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தூங்குகிற சுகம்

187


சில பேருக்குத் தூக்கம் வருவிக்கும் மருந்து புத்தகங்கள். புத்தகத்தைப் படித்துக் கொண்டே தூங்கிப் போய்விடுவார்கள். எங்கள் ஆசிரியப் பெருமான் டாக்டர் ஐயரவர்கள் நண்பகலில் உண்டவுடன் சிறிது படுத்து இளைப்பாறுவது வழக்கம். அப்போது யாரையாவது பாடம் கேட்கச் சொல்வார்கள். பாடம் சொல்லிக் கொண்டே உறங்கி விடுவார்கள்; அல்லது யாரையாவது எந்தச் செய்யுள் நூலையாவது படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே துயிலில் ஆழ்ந்து விடுவார்கள்.

சிலருக்கு வெளிச்சம் இருந்தால் உறக்கமே வராது. பகலில் தூங்க வேண்டுமானால், கண்ணைக் கட்டிக் கொண்டு தூங்குவார்கள். இன்னும் சிலருக்கு இராத்திரியில் விளக்கு இருந்தால்தான் தூக்கம் வரும். ஒரு கணவனுக்கு விளக்கு இருந்தால் உறக்கம் வராது. மனைவிக்கோ விளக்கு இருக்க வேண்டும். அவன் எழுந்தால் விளக்கை அணைத்து விடுவான். அவன் மனைவி எழுந்தால் மறுபடியும் விளக்கை ஏற்றி விடுவாள். இப்படி மாறி மாறிச் செய்தால் இரவு முழுவதும் அவர்கள் தொடர்ந்து தூங்கமுடியுமா?

எப்போதும் வெளியூர்களுக்கு ரெயிலில் போகிறவர்களில் சிலர் வண்டியில் படுத்தவுடன் தூங்கிவிடுகிறார்கள், ரெயிலின் சப்தம் அவர்களுக்குத் தாலாட்டுப் போல இருக்கும் போலும்! அவர்கள் தம் வீட்டில் உறங்கும்போது யாரையாவது ஒரு கட்டையை எடுத்துத் தட்டிக் கொண்டிருக்கும்படி செய்து தான் தூங்க முடியும் என்று நினைக்கிறேன்.சத்தம் இல்லாவிட்டால் அவா்களால் தூங்க முடியாதே!

தூங்கும்போது குறட்டை விடுகிறவர்கள் தம்மை மறந்து தூங்குகிறவர்களாக இருப்பார்கள். அந்தக் குறட்டையின் சுரபேதத்தாலேயே அவர்களுடைய தூக்கத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/194&oldid=1153269" இலிருந்து மீள்விக்கப்பட்டது