பக்கம்:புது டயரி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடைப் புராணம்

13

 இல்லை. ஒன்றில் இரண்டு கம்பிகள் முறிந்து விட்டன. மற்றொன்றில் துணியெல்லாம் பொத்தல். ஐந்தாவது குடையில் துணி, ஒரு கம்பியின் நுனியோடு தைத்த தையல் பிரிந்து மேலே ஏறியிருந்தது. முன்பே குடை ரிப்பேர்க்காரனிடம் கொடுத்து ஒக்கப் பண்ணி வைக்கச் சொல்லியிருந்தேன். யாரும் கவனிக்கவில்லை. அதனால்தான் எனக்குக் கோபம். அலுவலகம் புறப்படும் அவசரத்தில் வெளியே மழை சடசடவென்று பெய்துகொண்டிருக்கிறது; குடையோ சரியில்லை. கோபம் வராமல் என்ன செய்யும்?

அப்போது என் இரைச்சலைக் கேட்டுவிட்டு என் இல்லத்தரசி வேகமாக வந்தாள். அவள் கையில் கரண்டியோடு வந்தாள். “என்ன இரைகிறீர்கள்? யாருக்கு என்ன வந்துவிட்டது?” என்று என்ன விடச் சத்தம் போட்டுக் கேட்டாள். அடுப்பில் ஏதோ கொதித்துக் கொண்டிருக்க வேண்டும். அதை அவளுடைய திருக்கோலமும் குரலும் காட்டின.

“இரையாமல் என்ன செய்வது? ஒரு குடையாவது சரியாக இருக்கிறதா? மழை இல்லாத காலத்தில் சரிப்படுத்தும்படி எத்தனே தடவை சொல்லியிருக்கிறேன்?”

“அதெல்லாம் சரி. குடை ரிப்பேர்க்காரன் நம்மை விடக் கெட்டிக்காரன். மழைக்காலத்தில்தான் அவன் குடை ரிப்பேர் என்று கத்திக்கொண்டு வருகிறான் மற்றச் சமயங்களில் அவன் பூட்டு ரிப்பேர் பண்ணுகிறான். அவசியம் நேர்ந்தபோது எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார்கள் என்ற இரகசியத்தை அவன் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் என்ன செய்வது?”

இதற்குமேல் பேச எனக்கு வாய் இல்லை. பேசாமல் கம்பியோடு ஒட்டாமல் தையல் பிரிந்த குடையைக் கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/20&oldid=1149411" இலிருந்து மீள்விக்கப்பட்டது