பக்கம்:புது டயரி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

புது டயரி

 விட்டது. எதை எடுத்தாலும் அச்சுப் போட்டுவிடுகிறார்கள். எழுதுகிறவர்கள் பிழையுடன் எழுதினாலும் அதைப் பதிப்பிக்கிறவர்கள் பிழைகளைத் திருத்தி அழகாக அச்சிட வேண்டும். பிழை திருத்தாமல் அச்சுப் பிழைகளுடன் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தால் எனக்கு அம்மை வார்த்த முகந்தான் நினைவுக்கு வருகிறது.

சிறந்த பதிப்பாசிரியர்கள் அச்சுப் பிழைகளைக் கவனமாகத் திருத்துவார்கள். அச்சுப் பிழைகளை ‘அச்சுப் பிசாசு’ (Printer's Devil) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அச்சுக் கோப்பவரோ, அக்சடிப்பவரோ என்ன செய்வார்? ‘புரூப்’ பார்க்கிறவர் நன்றாகப் பார்த்தால் புத்தகம் பிழையில்லாமல் இருக்கும். பழைய காலத்தில் அச்சகங்களில் நன்றாகப் படித்தவர்களே அச்சுக் கோப்பார்கள். அதனால் பிழைகள் இருப்பதில்லை. அந்தக் காலத்தில் இன்னர் அச்சுக் கோத்தார் என்று புத்தகத்திலே வெளியிட்டிருப்பார்கள். அச்சுத் தொழிலுக்கும் மதிப்புண்டு என்பதை அது காட்டும். இப்போதோ அப்படி எதிர்பார்க்க முடியாது. அவசர அடியில் தவலை போவதற்குத் தலை போவதே அதிகமாக இருக்கிறது.

என்னுடைய ஆசிரியப்பிரான் அந்தக் காலத்தில் கலைமகளில் முதல் கட்டுரையை எழுதி வந்தார்கள். ஒரு கட்டுரையில், ‘மாலை நேரத்தில் சுமங்கலிகள் விளக்கேற்றினார்கள்’ என்று எழுதியிருந்தார்கள். ஆனால் ‘புரூப்’பில் சுமங்கலிகள் அமங்கலிகள் ஆகிவிட்டார்கள். ‘பாரம் புரூப்’ வரைக்கும் அந்தப் பிழை வந்துவிட்டது. வேகமாக எழுதும்போது சு என்பதற்கும் அ என்பதற்கும் வேறுபாடு தெரியாது. அச்சுக் கோப்பவர் இயந்திரம்போல வேலை செய்கிறவராகையால் பொருளில் சிந்தை செலுத்தாமல் அ என்றே நினைத்துக்கொண்டு அடுக்கிவிட்டார். ‘அமங்கலிகள் விளக்கேற்றினார்கள்’ என்று அமைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/201&oldid=1153375" இலிருந்து மீள்விக்கப்பட்டது