பக்கம்:புது டயரி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

புது டயரி

 தவறான உச்சரிப்பைக் குறித்துப் பரிகாசமாக வழங்கும் உதாரணங்கள் சில உண்டு. அதிகமாக வட சொற்களைத் தவறாகச் சேர்த்துப் பேசும் பேர்வழிகளைப் பரிகசிக்க ஒரு வாக்கியம் வழங்குகிறது. “ஆஷ்டுக்குட்டி வேஷ்டியைத் தின்கிறது; ஓஷ்டு ஓஷ்டு என்கிறான்” என்பது அது. அப்படியே மிகவும் சுத்தமாகத் தமிழ் பேசுவதாக எண்ணிக்கொண்டு பேசுகிறவர்களைப் பரிகசிக்க எழுந்த வாக்கியம் இது: “கன்றுக்குட்டி மன்றைத் தின்று மன்று மன்றாய்ப் பேன்றது.”

பல ஆண்டுகளுக்கு முன் சேந்தமங்கலம் என்ற ஊரில் சில இளைஞர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லி வந்தேன். அவர்கள் வாயில் லகர ழகர ளகரங்கள் சரியாய் வரவில்லை. அவர்களுக்கு அந்த எழுத்துக்களின் உச்சரிப்புச் சரியாக உச்சரிக்கும்படி செய்ய என்ன வழி என்று ஆராய்ச்சி செய்தேன். அருணாசல புராணத்தில் ஓர் அருமையான பாடல் கிடைத்தது. உண்ணாமுலையம்மை துதி அது. அதில் நிறைய லகர, ளகர ழகரங்கள் வருகின்றன. அந்தப் பாடலைப் பலமுறை அவர்களைப் படிக்கச் சொன்னேன். கடைசியில் சரியானபடி உச்சரிக்க முடிந்தது. அந்தப் பாடல் வருமாறு,

காரொழுகும் குழலாளைக் கருணைவழிந்
தொழுகும்இரு கடைக்கண் ணாளை
மூரலிள நிலவொழுகப் புழுகொழுக
அழகொழுகும் முகத்தி னாளை
வாரொழுகுந் தனத்தாளை வடிவொழுகித்
தெரியாத மருங்கு லாளைச்
சீரொழுகும் பதத்தாளை அருணைஉண்ணா
முலையாளைச் சிந்தை செய்வாம்.

இந்தப் பாட்டை ஒருவர் சரியாகச் சொல்லத் தெரிந்து கொண்டால் லகர, ளகர ழகர பேதங்கள் நன்றாக விளங்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/205&oldid=1153384" இலிருந்து மீள்விக்கப்பட்டது