பக்கம்:புது டயரி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

புது டயரி

 அவர் சற்றே கனைத்துக்கொண்டார். பிறகு, “நான் சொல்வதைக் கேட்டு, இப்படிப் பேசுவது அநுசிதம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்லத் தானே வேண்டும்? எனக்கு மூடி மறைக்கத் தெரியாது” என்று சொல்லிச் சிறிதே நிறுத்தினார்.

மற்றவர்களுக்கு ஆவலும் ஆத்திரமும் ஒருங்கே எழுந்தன. அவர் தொடர்ந்தார்:

“இவர்களைக் கண்டுபிடித்துத் தமக்குப்பிறகு பண்டார சந்நிதிகளாக வரவேண்டுமென்று முன் இருந்த மகாசந்நிதானம் தேர்ந்தெடுத்ததே, அது எவ்வளவு பெரிய காரியம்? அப்படி இவர்களால் செய்ய முடியுமா? இவர்களைப்போல வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியுமா?” என்று கேட்டபோது அவையிலுள்ள அத்தனை பேரும் ‘ஹாஹா!’ என்று ஆரவாரித்தார்கள். அத்தனை பேருடைய பாராட்டையும் அந்தக் கிழவர் பேச்சு விழுங்கிவிட்டது.

சுப்பிரமணிய தேசிகரே மிகவும் இனிமையாகப் பேசுகிறவர். ஒருசமயம் திருவாங்கூர் திவானாக இருந்த மாதவராவ் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்திருந்தார். ஆதீனத் தலைவர் அவரை வரவேற்று உபசரித்தார். பொன்னாடை போர்த்துக் கவுரவித்தார். பிறகு, “ராயரவர்கள் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ மரியாதைகளைப் பெற்றிருக்கக்கூடும். ஆனால் நாம் போர்த்திய இந்த ஆடையே எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும். அப்படி இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்” என்றார்.

அதைக் கேட்ட திவானுக்குச் சற்றே முகம் சிணுங்கியது. ‘என்னடா இவர் தம்முடைய பொன்னடையைத் தாமே பாராட்டிக் கொள்கிறார்?’ என்று நினைத்தார்.

அப்போது, “ராயரவர்கள் நாம் சொன்னதைப்பற்றி ஆலோசிக்கிறாற்போல் இருக்கிறது. தாங்கள் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/213&oldid=1153446" இலிருந்து மீள்விக்கப்பட்டது