பக்கம்:புது டயரி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டிரிங் டிரிங்!

213

 நிதானமாகப் போகலாமே!’ என்று வருந்துவேன். அது யார் தவறு?

ஏதாவது சுவாரசியமாக எழுதிக்கொண்டிருப்பேன். எதையாவது எழுதினால் ஒரேயடியில் எழுதி முடித்தால் தான் எனக்கு ஒடும். நடுவிலே நிறுத்தினால் முன்பு எழுதியதைக் கிழித்துப் போட்டுவிட்டுப் புதிதாகத்தான் எழுதுவேன். இப்படியே வழக்கமாகி விட்டது. பாதி எழுதிக் கொண்டிருக்கும்போது ‘டிரிங், டிரிங்’ அடித்தால் கவனிக்க மாட்டேன். கூப்பிடுகிறவர் விடாக்கண்டராக இருந்து விட்டால் ஆபத்துத்தான். டெலிபோன் வைத்த புதிதில் வீணாகானமாக ஒலித்த அந்த மணி இப்போது நாராசமாக இருக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு எடுத்து, “யார்?” என்று கேட்பேன். கல்கத்தாவிலிருந்து வந்திருக்கும் நெருங்கிய நண்பர், தம் குடும்ப சமாசாரத்தைச் சொல்வார்; எப்போது வந்து பார்க்கலாம் என்று கேட்பார். என் கோபம் மாறிவிடும். அவர் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருப்பார். பேசி முடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கினால் மூளை ‘பிரேக்’ போட்டது போல நின்றுவிடும்.

எங்கள் எதிர் வீட்டில் ஒரு பெரிய கம்பெனி மானேஜர் இருக்கிறார். அவருக்கு இன்னும் டெலிபோன் வரவில்லை. அவருடைய மனைவி இளம் பெண். அவளுக்குப் பல தோழிமார்கள். அந்தப் பெண்மணி கையில் பதினைந்து நயா பைசாவை வைத்துக்கொண்டு வருவாள். அவள் வரும் போதே என் மனைவி அவளை எதிர்கொண்டு அழைப்பாள். பெரிய வேலைக்காரர் மனைவி எளிதில் வந்து விடுபவளா? டெலிபோனைச் சாக்கிட்டாவது வருகிறாளே என்று என் மனைவிக்கு மகிழ்ச்சி. “காசு கீசு வேண்டாம்” என்பாள் அவள். அந்தப் பெண்மணி கேட்கமாட்டாள்.

“கொஞ்சம் இந்தப் பக்கம் வருகிறீர்களா?” என்று என் மனைவி என்னிடம் வந்து மெல்லச் சொல்வாள். எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/220&oldid=1153470" இலிருந்து மீள்விக்கப்பட்டது