பக்கம்:புது டயரி.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

புது டயரி


வரச்சொல்கிறேன்” என்று அவளே பேசி முடித்து விடுவாள். அவசர அவசரமாகப் பையனை எழுப்பி அந்த நள்ளிரவில் நாலாந்தெருவில் உள்ள ருக்மிணியம்மாளை உடனே மண்ணடிக்குப் போகும்படி .சொல்லி அனுப்புவாள்.

பகல் பதினோரு மணி. பையன்கள் பள்ளிக்கூடம் போய் விட்டார்கள், வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன். டெலிபோனில் யாரோ கூப்பிட்டார்கள். யாரோ ஒருவர் விம்மினபடியே பேசினார். “ஸார், ஸார். அந்த ஐந்தாங் தெருவில் என் தம்பி...... இருக்கிறான், அம்மா செத்துப் போய்விட்டாள் என்று சொல்லி உடனே வரச் சொல்லுங்கள்.” — அவர் அழுதுகொண்டே சொன்னார். ஐந்து தெருத் தாண்டிச் சமாசாரம் சொல்ல யார் ஆள்? ஆள் இல்லை என்று சொல்லுகிற செய்தியா அது அந்த அம்மாள் காலை வேளையிலே செத்துப் போயிருக்கக் கூடாது? அப்போது எங்கள் பையன்களில் ஒருவனிடம் சொல்லி அனுப்பலாமே!

இப்போது வேறு என்ன செய்கிறது? ரிஸீவரைத் தனியே வைத்துவிட்டு, பனியனோடு வேகமாகப் போனேன். ஐந்தாங் தெருவுக்குப் போய்ச் சமாசாரம் சொன்னேன். நல்ல சமாசாரம் அல்லவா? அந்த மனிதர் வந்தார். அந்தக் கண்ணராவியில் நான் அலைந்தது கூட மறந்து போய் விட்டது.

வேலை கெடுகிறது; தூக்கம் கெடுகிறது; சம்பளம் இல்லாத வேலைக்காரனாக உழைக்க வேண்டியிருக்கிறது! இத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டு அந்த டெலிபோனை வைத்திருப்பானேன் என்று பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனாலும்....

டிாிங்.. டிாிங்...

டெலிபோன்தான்; பேசிவிட்டு வருகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/223&oldid=1153473" இலிருந்து மீள்விக்கப்பட்டது